Singtel சலுகை பங்குகள் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!! நவம்பர் 21 முதல் புதிய மாற்றம்.!

Singtel சலுகை பங்குகள் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!! நவம்பர் 21 முதல் புதிய மாற்றம்.!

சிங்கப்பூர்: Singtel சிறப்பு தள்ளுபடி பங்குகளை (SDS) வைத்திருப்பவர்களில் சுமார் 27% பேர் தங்களிடம் இருந்த சலுகை பங்குகளை ஏற்கனவே விற்பனை செய்துள்ளனர்.

ஆகஸ்ட் 31, 2026 நிலவரப்படி, சுமார் 1,63,000 பேர் தங்களது பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இது மொத்த SDS பங்குதாரர்களில் சுமார் 27% ஆகும். இதுவரை சுமார் 180 மில்லியன் பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

தற்போது CPF மூலம் வைத்திருக்கும் Singtel சலுகை பங்குகள், நவம்பர் 21, 2026 அன்று பங்குதாரர்களின் CDP கணக்குகளுக்கு மாற்றப்பட உள்ளன.

ஏற்கனவே தனிப்பட்ட CDP கணக்கு வைத்திருப்பவர்களின் பங்குகள் அந்தக் கணக்கில் தானாகவே சேர்க்கப்படும். இதற்காக அவர்கள் தனியாக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டியதில்லை.

தனிப்பட்ட CDP கணக்கு இல்லாதவர்களுக்கு, அவர்களின் பெயரில் ஒரு Designated CDP Account உருவாக்கப்படும். இந்தக் கணக்கு Singtel சலுகை பங்குகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உரிமைகளை வைத்திருப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் பயன்படுத்தப்படும்.

நவம்பர் 21-க்கு முன் பங்குகளை விற்க விரும்புபவர்கள் நவம்பர் 18 வரை விற்பனை செய்யலாம்.

 

பங்குகள் மாற்றப்படும் பணிகளை முன்னிட்டு, நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சலுகை பங்குகளின் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்படும். நவம்பர் 21 அன்று மாற்றம் முடிந்த பிறகு மீண்டும் விற்பனை செய்யலாம்.

மேலும், Singtel சலுகை பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் கிடைக்கும் பணத்தை CPF கணக்கிலிருந்து எடுப்பதற்கான தற்போதைய விதிவிலக்கு தொடரும்.

 

இந்த மாற்றத்துடன் தொடர்புடைய மோசடிகள் குறித்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். Singtel சலுகை பங்குகள் தொடர்பாக இணையதளம், மின்னஞ்சல் அல்லது QR குறியீடு மூலம் வரும் தகவல்களை நம்புவதற்கு முன், அது அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து வந்ததா என்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிங்க்டெல் பங்கு சலுகை திட்டம் 1993ல் தொடங்கப்பட்டது. இது பங்குதாரர் ஆவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பலன்களில் சிங்கப்பூரர்கள் பங்குபெற வழி வகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.