குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்..!! உமே சாலையில் பரபரப்பு..!!

குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்..!! உமே சாலையில் பரபரப்பு..!!

சிங்கப்பூர்: உமே பகுதியில் மே 20 ஆம் தேதி அன்று மாலை நேரத்தில் பரபரப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. சாலையைக் கடக்க காத்திருந்த மிதிவண்டி ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகள் மீது திடீரென ஒரு கார் மோதியுள்ளது.

இதில் 39 வயதான மிதிவண்டி ஓட்டுநர் ஒருவர் காயமடைந்துள்ளார். கார் ஓட்டுநர் குடிபோதையில் வாகனம் ஓட்டி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல்துறை அவரை கைது செய்துள்ளது.

இது குறித்த காணொளி SGRV ADMIN என்ற சமூக ஊடகப் பக்கம் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தது. அந்த காணொளியில் ஒரு சந்திப்பில் உள்ள பாதசாரிகள் கடக்கும் பகுதிக்கள் ஒரு தீடீரென திரும்பவது தெரிகிறது.

சாலையைக் கடக்க காத்திருந்த மிதிவண்டி ஓட்டுநர்களும், பாதசாரிகளும் எதிரே வரும் காரை தவிர்ப்பதற்காக பயந்து பதற்றத்துடன் அங்கிருந்து ஓடுவதும் தெரிகிறது.

பின்னர் அந்த கார் மிதிவண்டிகள் மற்றும் சில சாலைத் தடுப்புகள் மீது மோதியுள்ளது. கார் மோதியதில் ஒரு போக்குவரத்து விளக்கும் தரையில் சாய்ந்தது.

இந்த விபத்து ஏற்படுத்திய காரந்த இடத்தில் நிற்கவில்லை. அதன் ஓட்டுநர் வேகத்தை அதிகரித்து எதிர்ப்புற பாதைக்கு திரும்பி போக்குவரத்து சிக்னலில் நின்று கொண்டிருந்த ஒரு டாக்ஸி மீது மோதியுள்ளார்.

உமே சாலை 2 மற்றும் சாலை 3 சந்திப்பில் 3 கார்கள் மற்றும் 1 மிதிவண்டி சம்பந்தப்பட்ட சாலை விபத்து ஏற்பட்டுள்ளதாக இரவு 8:10 மணியளவில் கங்களுக்கு தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

சாலை விபத்து குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறை கூறியுள்ளது. மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகத்தின் பேரில் 74 வயது கார் ஒட்டுநர் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை கூறியுள்ளது.

சம்பவ இடத்தில் காயமடைந்த மிதிவண்டி ஓட்டுநரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினர்(SCDF) தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவமனைக்கு செல்லும் பொழுது அவர் சுயநினைவுடன் இருந்தார் என்பதையும் SCDF உறுதி செய்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK