சொங் பாங் சிட்டி கட்டுமானப் பணி மீண்டும் தொடக்கம்..!! LTA அறிவிப்பு..!!

சொங் பாங் சிட்டி கட்டுமானப் பணி மீண்டும் தொடக்கம்..!! LTA அறிவிப்பு..!!

சிங்கப்பூர்: சொங் பாங் சிட்டி ஒருங்கிணைந்த மேம்பாட்டுக்கான கட்டுமான பணிகளை மீண்டும்  நேற்று (மே 26) தொடங்கியுள்ளது.

உலோக கம்பி ஒன்று விழுந்து விவக கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்தக் காரணத்தால் 3 வாரங்களுக்கு மேலாக அனைத்து வேலைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

அதனால் கட்டுமான தளத்தில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் ஈ சூன் ரிங் ரோட்டில் உள்ள புளோக் 103 மேற்கூறையை சீர் செய்வதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த பணிகள் ஜூன் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) நேற்று (மே 26)அறிக்கை வெளியிட்டுள்ளது.

மே 2- ஆம் தேதி நிகழ்ந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், உடனடியாக அனைத்து வேலைகளையும் தற்காலிகமாக நிறுத்த வேண்டுமென்று கட்டுமான ஒப்பந்ததாரருக்கு LTA உத்தரவிட்டிருந்தது.

மே 6ஆம் தேதி கட்டிட கட்டுமான ஆணையம் வேலை நிறுத்த உத்தரவை பிறப்பித்தது. அதுமட்டுமல்லாமல் சம்பவத்தைத் தகுதி வாய்ந்த ஒருவர் விசாரிக்க வேண்டும் எனவும் ஆணையும் வலியுறுத்தி இருந்தது.

உலோக கம்பியை அகற்றிக் கொண்டிருந்தபோது ஊழியரின் கையில் இருந்து அதன் நழுவியதால் சம்பவம் நிகழ்ந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் வீவக புளோக்கின் கூரை சேதமடைந்துள்ளது. ஆனால் கட்டிடத்தின் அடிப்படை கட்டமைப்பு பாதிக்கப்படவில்லை என்று வல்லுநர்கள் உறுதி செய்துள்ளனர். புளோக்கும் பொது தாழ்வாரங்களும் குடியிருப்பாளர்களுக்கு பாதுகாப்பாக இருக்கின்றது என LTA தெரிவித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK