காவல்துறைக்கு 1000 முறைக்கு மேல் அழைப்பு விடுத்த நபர்..!! எதற்காக??

காவல்துறைக்கு 1000 முறைக்கு மேல் அழைப்பு விடுத்த நபர்..!! எதற்காக??

சிங்கப்பூர்: ஒரு சில வாரங்களாக காவல்துறை உதவி எண்ணிற்கு 1,000க்கும் அதிகமான அழைப்புகள் சந்தேக நபரிடம் இருந்து வந்துள்ளது. காவல்துறை அந்த அழைப்பிற்கு பதில் அளித்ததும் அந்த நபர் அழைப்பில் மௌனமாக இருந்துள்ளார்.

சிங்கப்பூர் காவல்துறை நேற்று (மே 12) வெளியிட்ட ஒரு அறிக்கையில், அந்த நபர் கடந்த மாதம் 21ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பல்வேறு பகுதி காவல்துறை உதவி எண்களுக்கு இது போன்ற அழைப்புகளை விடுத்துள்ளார். அதன் மூலம் அவரிடமிருந்து 1,035-க்கும் அதிகமான மௌன அழைப்புகள் பெறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த நபர் வெளிநாட்டு தொலைபேசி எண்களைப் பயன்படுத்துதல் மற்றும் அழைப்புகளின் போது மௌனமாக இருத்தல் போன்ற பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி அவரது அடையாளத்தை மறைத்துள்ளார்.

இது குறித்து விசாரணை மேற்கொண்டபோது உட்லண்ட்ஸ் காவல்துறை அந்த நபரின் அடையாளத்தை கண்டறிந்துள்ளது. பின்பு அவரை மே 11ஆம் தேதி அன்று கைது செய்துள்ளது.

37 வயதுடைய அந்த நபர் மீது, ஒரு அரசு ஊழியரின் கடமையை வேண்டுமென்றே தடுத்த குற்றத்திற்காக,தண்டனைச் சட்டத்தின் பிரிவு 186(1)-ன் கீழ் குற்றம் சாட்டப்பட உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்த நபர் மீது இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ம மாதங்கள் வரை சிறைத் தண்டனை மற்றும் $2500 அபராதமும் அல்லது இரண்டு விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

மேலும் வேறு ஒருவரின் தனிப்பட்ட தரவுகள் பதிவு செய்யப்பட்ட சிம்கார்டுகளைப் பயன்படுத்திய குற்ற செயல்களில் ஈடுபட்டதற்காக அந்த நபர் மீது பொது ஒழுங்கு மற்றும் இடையூறு சட்ட பிரிவு 39D-ன் கீழ் குற்றம் சாட்டப்படும். அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் $10,000 வரை அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இது போன்ற மோசடியான தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வதை காவல்துறை தீவிரமாக எடுத்துக் கொள்வதாகவும், இதில் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டறிந்து தேவைப்பட்டால் அவர்களை நீதியின் முன் நிறுத்துவோம் என்று காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK