சிங்கப்பூரில் சாலை விபத்து..!! கட்டுப்பாட்டை இழந்த காரால் நேர்ந்த விபரீதம்...!!
சிங்கப்பூர்: பாலஸ்டியர் சாலை பகுதியில் செடன் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்த வடிகாலில் கவிழ்ந்த விபத்தில், 52 வயது பயணி ஒருவர் காயமடைந்து டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த விபத்தானது ஜூலை 5ஆம் தேதி அன்று இரவு 8:20 மணி அளவில் நிகழ்ந்துள்ளது.
இது குறித்த தகவலானது சிங்கப்பூர் காவல்துறைக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பாலஸ்டியர் சாலையில் சென்ரல் விரைவுச்சாலை நோக்கிச் செல்லும் மாற்றுப் பாதைக்கு அருகில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறை உறுதி செய்துள்ளது.
ஒரு வெள்ளை நிற செடான் கார் ஒன்று வேறு எந்த வாகனத்தின் மீது மோதாமல் தனது கட்டுப்பாட்டை இழந்த சாலையோர வடிகாலில் தலை கீழாக கவிழ்ந்ததாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் 52 வயது பயணி சுயநினைவுடன் சிகிச்சைக்காக டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக SCDF அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.