தேசிய காசநோய் பரிசோதனை மையமானது செயற்கை நுண்ணறிவு கருவியை புதிதாக பயன்படுத்த தொடங்கியுள்ளது. இந்த மையத்தில் மார்பு எக்ஸ்ரே படங்களை பகுப்பாய்வு செய்வதற்கு இந்த செயற்கை நுண்ணறிவு கருதி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் மருத்துவ பணியாளர்கள் காச நோய் பாதிப்புகளை மிகவும் துல்லியமாக கண்டறிய முடிகிறது. ஆறு மாதங்களுக்கு முன்பே இது செயல்படுத்த தொடங்கிவிட்டது. இந்த அமைப்பு கிட்டத்தட்ட 3000 படங்களை பகுப்பாய்வு செய்திருக்கிறது.
இதற்கு முன்பாக எக்ஸ்ரே படங்களை பகுப்பாய்வு செய்து அதன் அறிக்கை வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகும் வேலையில் தற்போது செயற்கை நுண்ணறிவால் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களிலேயே இந்த அறிக்கைகள் கிடைக்கின்றன.
இந்த கருவி எக்ஸ்ரே படங்களை பகுப்பாய்வு செய்து நிழல்கள், வெள்ளை புள்ளிகள் மற்றும் கட்டிகள் போன்ற காச நோயின் உடைய பொதுவான அறிகுறிகளையும் சுட்டிக்காட்டி வெளிப்படுத்துகிறது.
இதற்கு முன்பாக எக்ஸ்ரே படங்களை பகுப்பாய்வு செய்து அதன் அறிக்கை வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகும் வேலையில் தற்போது செயற்கை நுண்ணறிவால் இரண்டு அல்லது மூன்று நிமிடங்களிலேயே இந்த அறிக்கைகள் கிடைக்கின்றன.
இந்த கருவி எக்ஸ்ரே படங்களை பகுப்பாய்வு செய்து நிழல்கள், வெள்ளை புள்ளிகள் மற்றும் கட்டிகள் போன்ற காச நோயின் உடைய பொதுவான அறிகுறிகளையும் சுட்டிக்காட்டி வெளிப்படுத்துகிறது.
இந்த அமைப்பு ஒரு டிஜிட்டல் மருத்துவ உதவியாளராக செயல்படுவதால் மார்பு எக்ஸ்-ரே படங்களை நிகல் நேரத்தில் பகுப்பாய்வு செய்து காசநோயின் பாதிப்புகளையும் குறிப்பிடுகிறது என்று தேசிய காசநோய் பரிசோதனை மையக்குழு கூறியுள்ளது.
இது குறித்த மேலும் ஆழ்ந்த பரிசோதனைகள் தேவைப்படும் நோயாளிகளை மருத்துவர்கள் அடையாளம் காண்பதற்கு எளிதாக உள்ளது என்பதை பரிசோதனை மையக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தக் கருவியின் மூலம் நோயை கண்டறிய முடியாது. ஆனால் மருத்துவ மதிப்பீட்டிற்கு உதவும் வகையில் அமைந்துள்ளது. மருத்துவர்களின் தொழில் முறை ஆராயும் திறனை கொண்டதாக உள்ளது.
12 மருத்துவ பணியாளர்களுக்கு செயற்கை நுண்ணறிவு கருவியை கையாளும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கருவி அவர்களின் பரிசோதனை திறனையும் மேம்படுத்தியது மட்டுமல்லாது மருத்துவ முடிவுகளை எடுப்பதில் அவர்களுடைய நம்பிக்கையையும் வலுப்படுத்த உதவியாக உள்ளது.
தேசிய காசநோய் பரிசோதனை மையத்தினுடைய இயக்குனரும் தேசிய தொற்று நோய்கள் மையத்தின் தொற்றுநோய் நிபுணர் ஆலோசகரமான டாக்டர் ஜெங் ஜூன்யாங் இந்த கருவி குறித்து கூறியதாவது: “முன்பாக எக்ஸ்ரே எடுத்த பிறகு கதிரியக்க நிபுணர் அறிக்கையை தயாரிக்க நாங்கள் ஒன்று முதல் இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டி இருக்கும். ஆனால் செயற்கை நுண்ணறிவு மூலமாக சுமார் இரண்டு முதல் மூன்று நிமிடங்களிலேயே அறிக்கையை உருவாக்க முடிகிறது. இது மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் நோயாளிகளுடன் தங்கள் சிகிச்சை திட்டங்களை பற்றி விவரிக்க உதவியாக உள்ளது”.
செயற்கை நுண்ணறிவு பயன்பாடு: 👉ஆரம்ப கட்ட பரிசோதனை செயல்முறையை தரப்படுத்த உதவுகிறது. 👉 படங்களில் உள்ள நுணுக்கமான மாற்றங்களை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ள அனுபவம் குறைந்த சுகாதார பணியாளர்களுக்கும் இது பெரிய உதவியாக இருக்கும். 👉 இந்த செயற்கை நுண்ணறிவு கருதி சாதாரண மார்பு எக்ஸ்ரே முடிவுகளையும் உறுதிப்படுத்த முடியும். 👉 தீவிர காச நோய்க்கான சாத்தியக்கூறுகளை நிராகரிப்பதற்கு மருத்துவர்களுக்கு அதிக உதவியாகவும், இதன் மூலம் தடுப்பு சிகிச்சையை சரியான நேரத்தில் தொடங்குவதற்கும் சாத்தியக்கூறுகள் உள்ளது.