செங்காங் – பெங்கோல் LRT டிப்போ விரிவாக்கம்..!! நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு ..!!

செங்காங் - பெங்கோல் LRT டிப்போ விரிவாக்கம்..!! நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு ..!!

சிங்கப்பூர் : செங்காங் – பெங்கோல்  LRT சேவைகளின் டிப்போ (Depot) தற்போது இருப்பதை விட மும்மடங்கு பெரிதாக விரிவாக்கப்பட உள்ளது.

இது குறித்த தகவல்களை நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று (ஏப்ரல் 12 ) வெளியிட்டுள்ளது.

இந்த விரிவாக்கப் பணிகள் 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

பராமரிப்பு நிலையத்தின் பரப்பளவு 3.5 ஹெக்டரில் இருந்து 11.1 ஹெக்டராக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள ரயில்களை நிறுத்துவதற்கு போதுமான இடம் மற்றும் புதிய LRT -களுக்கான இடம் என விரிவாக்கத்திற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.

செங்காங் – பெங்கோல் LRT சேவைக்காக 25 இரண்டு பெட்டிகள் கொண்ட ரயில்கள் வாங்கப்பட்டுள்ளன. அவற்றின் எடை கனமாக இருக்காது.

சில காலமாக செங்காங் – பெங்கோல் LRT சேவைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. ஆகையால் மக்களுக்குச் சிறப்பான சேவை வழங்கும் வகையில் இந்த கட்டமைப்பு விரிவுப்படுத்தப்பட உள்ளது.

செங்காங் – பெங்கோல் LRT சேவையை எஸ்பிஎஸ் போக்குவரத்து நிறுவனம் வழங்கி வருகிறது.

நிலையத்தில் புதியதாக ஒரு பராமரிப்புக் கட்டிடம் மற்றும் பயணச் சேவைகளின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வகையில் சோதனைத் தண்டவாளம் போன்றவையும் இடம் பெற உள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியுள்ளது.

இந்த விரிவாக்கப் பணிகள் 2027 ஆம் ஆண்டில் முடிவடையும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK