சிங்கப்பூரில் விதிகளை மீறிய இருசக்கர வாகன ஓட்டிகள் கைது..!!

சிங்கப்பூரில் விதிகளை மீறிய இருசக்கர வாகன ஓட்டிகள் கைது..!!

சிங்கப்பூர் : நிலப் போக்குவரத்து ஆணையமும் (LTA), தேசிய சுற்றுச்சூழல் முகமையும் (NEA) இணைந்து மார்ச் 31ஆம் தேதி அன்று சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது.

அதில் 300க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த நடவடிக்கை குறித்து LTA இன்று காலை (ஏப்ரல் 11)தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் பயன்படுத்துபவர்கள் உட்பட அனைத்து ஓட்டுநர்களும் சிங்கப்பூர் சட்டத்திற்குக் கண்டிப்பாக கட்டுப்பட வேண்டும் என்று LTA வலியுறுத்தியுள்ளது.

24 வயதிற்கும் 61 வயதிற்கும் இடைப்பட்ட 10 பேரைப் போக்குவரத்து காவல்துறை இந்த சோதனையின் முடிவில் கைது செய்துள்ளது.

விதிமுறைகளுக்கு உட்படாத உரிமத் தகடுகள் மற்றும் காலாவதியான சாலை வரி உள்ளிட்ட விதிமுறைகளுக்காக 40 சம்மன்கள் வழங்கப்பட்டதாக LTA கூறியுள்ளது.

சிங்கப்பூர் சாலை விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் LTA தெரிவித்துள்ளது.

விதிமுறைகளுக்கு உட்படாத உரிமத் தகடுகள்: அதிகபட்சமாக $1,000 அபராதம் அல்லது 2 மாத சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்; விழியை மீண்டும் மீறுபவர்களுக்கு இரட்டை தண்டனைகள் வழங்கவும் வாய்ப்புள்ளது.

அலங்கார விளக்குகள் : அதிகபட்சமாக $1,000 அபராதமும் அல்லது 3 மாதம் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.மீண்டும் மீண்டும் விதியை மீறுபவர்களுக்கு இரட்டை தண்டனைகள் வழங்கப்படும்.

பதிவு செய்யப்படாத சாலை வரி : அதிகபட்சமாக $2,000 அபராதமும், வரி ஏய்ப்பு செய்யும் நோக்கம் இருந்தால் அதற்கு செலுத்த வேண்டிய வரித்தொகையைப் போல் 3 மடங்கு அபராதம் விதிக்கப்படும்.

மேலும் இந்த நடவடிக்கையில் அதிகப்படியான வாகனப் புகை வெளியேற்றம், அதிகப்படியான இரைச்சல் மற்றும் விதிகளுக்கு உட்படாத உரிமத் தகடுகள் உள்ளிட்ட விதிமீறல்களுக்காக 80க்கும் மேற்பட்ட சமன்கள் வழங்கப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK