இந்த நடவடிக்கையின் நோக்கமானது அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவரை பிடிப்பதாகும். அந்த வகையில் மொத்தம் 52 பேர் பிடிபட்டுள்ளனர்.
பிடிபட்டவர்களில் 36 பேர் சரக்கு வாகனங்கள் ஓட்டி வந்ததும் தெரியவந்துள்ளது. அந்த 36 சட்டவிரோத ஓட்டுநர்களில் 30 பேர் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், மற்ற 6 பேர் மெக்ஸிகோ, எல் சால்வடோர், ரஷ்யா ஆகிய நாட்டினை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் கலிபோர்னியா, நியூயார்க், வாஷிங்டன் ரெஜிமியா போன்ற மாநிலங்களின் வணிக ஓட்டுநர் உரிமங்கள் இருந்துள்ளன. சிலரிடம் எவ்வகை வாகனம் ஓட்டுநர் உரிமமும் இல்லை.
கைது செய்யப்பட்டவர்களில் சிலர் முன்னாள் அதிபர் ஜோ பைடன் ஆட்சியில் இருந்தபோது வழங்கப்பட்ட வேலை அனுமதி ஆவணங்களை வைத்திருந்தனர். ஆனால் தற்போது அவை காலாவதி ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டவர்கள் மீது கூட்டரசு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதன் மூலம் அவர்கள் நாடு கடத்தப்படுவர் என அமெரிக்க சங்க எல்லைப் பாதுகாப்புப் படை(US.CBP) அறிக்கை வெளியிட்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப் இரண்டாம் முறையாக அதிபர் பொறுப்பை ஏற்றதற்கு பின்பு, தகுதியில்லாத வெளிநாட்டு ஓட்டுநர்கள் வணிக வாகனங்களையும் பேருந்துகளையும் ஓட்டுவதற்காக ஓட்டுநர் உரிமம் பெறுவதை தடுத்து நிறுத்தும்படி அமெரிக்கப் போக்குவரத்து அமைச்சகம்(USDOT) ஆணை பிறப்பித்துள்ளது.