சிங்கப்பூரின் பழமையான இந்துக் கோவில்..!! 200-ஆவது ஆண்டு விழா தொடக்கம்..!!

சிங்கப்பூரின் பழமையான இந்துக் கோவில்..!! 200-ஆவது ஆண்டு விழா தொடக்கம்..!!

சிங்கப்பூரின் பழமையான இந்துக் கோவிலான ஸ்ரீ மாரியம்மன் ஆலயம், தனது 200-ஆவது ஆண்டு நிறைவை சிறப்பாகக் கொண்டாட உள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயம், 1827-ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, சிங்கப்பூரின் கலாச்சார மற்றும் மத பாரம்பரியத்தின் முக்கிய அடையாளமாக திகழ்கிறது.

200 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, பக்தர்களுக்காக சிறப்பு பூஜைகள், ஆன்மிக நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்வுகள் மற்றும் சமூக சேவைத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளன.

மேலும், சிங்கப்பூரின் பல்வேறு இந்துக் கோவில்களை இணைக்கும் வெள்ளி ரத ஊர்வலம், ஆலயத்தின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் புகைப்படங்கள், அரிய பொருட்கள் மற்றும் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் இடம்பெறும் நடமாடும் கண்காட்சி மற்றும் ஆலய வளாகத்தில் நிலையான கண்காட்சி ஆகியவை பொதுமக்களுக்காக இலவசமாக ஏற்பாடு செய்யப்படுகின்றன.

200 ஆண்டு நிறைவைக் குறிக்கும் ஆ வகையில் நினைவுச் சின்னம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆலயத்தின் வரலாற்றை எடுத்து கூறும் புத்தகமும் வெளியிடப்பட உள்ளது.

“Amman’s Home, People’s Temple” என்ற பெயரில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருமொழி (ஆங்கிலம், தமிழ்) பாரம்பரிய நூலும் வெளியிடப்பட உள்ளது. இந்த புத்தகத்தை கல்வியாளர்களும் வரலாற்று நிபுணர்களும் தயாரிக்க உள்ளனர்.

இந்த நூலில் ஆலயத்தின் வரலாறு, ஆரம்பகால இந்தியக் குடியேறிகளின் பங்களிப்பு மற்றும் சிங்கப்பூரின் வளர்ச்சியுடன் ஆலயம் இணைந்து பயணித்த வரலாறு இடம்பெறும்.

இந்த 200-ஆண்டு கொண்டாட்டம், ஆலயத்தின் சிறப்புமிக்க வரலாற்றை நினைவுகூருவதோடு, அடுத்த தலைமுறையினருக்கும் அதன் பாரம்பரியத்தை எடுத்துச் செல்லும் முக்கிய நிகழ்வாக அமையும்.

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.