சிங்கப்பூர் செவிலியர்களுக்கான புதிய கவனிப்புத் திறன் பயிற்சி ..!! MOH அறிவிப்பு..!!

சிங்கப்பூர் செவிலியர்களுக்கான புதிய கவனிப்புத் திறன் பயிற்சி ..!! MOH அறிவிப்பு..!!

சிங்கப்பூர்: சுகாதார மற்றும் நல்வாழ்வு அமைச்சகமானது (MOH) செவிலியர்களுக்கானப் பராமரிப்பு திறன்களில் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டமானது நாட்டில் உள்ள மொத்த செவிலியர்களின் எண்ணிக்கையில் இருந்து 5- இல் 1 பங்கிற்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் அதிகமான மக்கள் மேம்பட்ட இறுதிக்காலப் பராமரிப்பு சேவைகளைப் பெற இயலும் என்று MOH கருதுகிறது.

சமூகக் கொள்கைகள் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரான ஓங் யே குங், நேற்று(ஏப்ரல் 18) நடைபெற்ற 9-வது சிங்கப்பூர் இறுதிக்காலப் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு கருத்தரங்கின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு அதில் இந்த புதிய குறிக்கோள் பற்றி அறிவித்துள்ளார்.

முந்தைய கணக்கெடுப்புகளின் படி, மூன்றில் இரண்டு பங்கு சிங்கப்பூரர்கள், தங்களுக்கு பழக்கமான வீடுகளில் மற்றும் அன்புக்குரியவர்களால் சுற்றி இருந்து அமைதியாக இறப்பதையே விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

நோயின் இறுதி கட்டங்களில் நோயாளிகளின் உடல் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், அவர்களின் உணர்ச்சி மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் ஆதரவளிக்கும் வகையில் இந்த பராமரிப்புப் பயிற்சி செவிலியர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் ஓங் கூறியுள்ளார்.

செவிலியர்களுக்கு மட்டுமல்லாமல் குடும்ப மருத்துவர்கள், துணை மருத்துவ பணியாளர்கள் மற்றும் சமூக பராமரிப்பு பணியாளர்களுக்கும் இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அவ்வாறு பயிற்சி எடுப்பதன் மூலம் நோயாளிகளுக்கு வாழ்நாள் முழுவதும் தடையில்லாத ஆதரவை சிறப்பாக வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தங்கள் வாழ்வின் இறுதி ஆண்டில் நோய்த் ததணிப்புப் பராமரிப்பைப் பெறும் உள்ளூர் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும், 2 ஆண்டுகளுக்கு முன்பு 46% ஆக இருந்த இந்த விகிதம் தற்பொழுது 51% ஆக உயர்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

கருணையான கவனிப்பு திறன்களில் தேர்ச்சி பெற அதிக நபர்களுக்கு பயிற்சி அளிப்பதுடன், நோயாளிகளுக்கும்,
பராமரிப்பாளர்களுக்கும் வழங்கப்படும் ஆதரவை வலுப்படுத்துவதே இந்த பயிற்சியின் அடுத்த கட்டமாக இருக்க வேண்டும் என்றும் ஓங் குறிப்பிட்டுள்ளார்.

குடும்ப உறுப்பினர்களும், பராமரிப்பாளர்களும் தன்னம்பிக்கையை தொடர்ந்து கற்றுக் கொண்டு வருகிறார்கள் இதன் மூலம் அவர்களது அவசரகால சூழலில் பொது மருத்துவர் அல்லது சமூக செவிலியரோ சம்பவம் இடத்திற்கு வந்து தேவையான ஆதரவை வழங்க முடியும்.

நோயாளிகள் தங்கள் விருப்பங்களைப் பராமரிப்பாளர்களிடமும், மருத்துவர்களிடமும் வெளிப்படுத்த வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த புதிய கவனிப்புப் பயிற்சி திட்டமானது 2030 ஆம் ஆண்டுக்குள், 10,000 செவிலியர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK